2018ல் குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்ற தாய் அபிராமி குற்றவாளி என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 24) தீர்ப்பு வழங்கியது.இன்றுconvict
சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி. மியூசிக்கலி செயலி மூலம் பிரபலமடைந்தவர். இவரது கணவர் விஜய்.
இந்த நிலையில் சுந்தரத்துடன் மகிழ்ச்சியாக வாழ விரும்பிய அபிராமி பெற்ற குழந்தைகள் என்று கூட பாராமல், தனது இரு குழந்தைகளான அஜய் மற்றும் கார்னிகாவுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ப. உ. செம்மல், குழந்தைகளை கொன்ற அபிராமி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அவருக்கான தண்டனை விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. Kundrathur abirami convict
