தமிழுக்கு வரும் கும்பளங்கி நைட்ஸ்!

Published On:

| By Balaji

கடந்த வருடம் வெளியாகி பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற மலையாள திரைப்படமான கும்பளங்கி நைட்ஸ் தமிழுக்கு வருகிறது.

மலையாள சினிமாவின் முன்னணி திரைக்கதை ஆசிரியர்களுள் ஒருவர் ஷ்யாம் புஷ்கரன். இவர் சால்ட் அண்ட் பெப்பர், இடுக்கி கோல்ட், இயோபின்றே புஸ்தகம், அஞ்சு சுந்தரிகள், மகேஷின்றே பிரதிகாரம், தொண்டிமுதலும் திருக்சாட்சியும், மாயநதி போன்ற வெற்றி படங்களின் கதாசிரியர். இவர் இயக்குநர் திலேஷ் போத்தன், நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து, முதல் முறையாக தன் சொந்த தயாரிப்பில் உருவாக்கிய திரைப்படம் கும்பளங்கி நைட்ஸ். இந்தப் படத்தை மது.சி.நாராயணன் இயக்கி இருந்தார்.

ADVERTISEMENT

ஷான் நிகம், ஃபகத் ஃபாசில், சௌபின் சாஹிர், டூலெட் படத்தில் நடித்திருந்த சுசீலா மற்றும் பலர் இணைந்து நடித்திருந்தனர். சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் கேரளாவில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. தேர்ந்த நடிப்பு, எதார்த்தமான கதை என விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றதோடு மட்டுமின்றி பல விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

தற்பொழுது இதன் தமிழ் உரிமையை ஈகிள் ஐ தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. இவர்கள் ஏற்கனவே தமன்னா நடிப்பில் பெட்ரோமாக்ஸ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளனர். மேலும் நடிகர் கதிர் கும்பளங்கி நைட்ஸ் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share