குமரி கண்ணாடி கூண்டு பாலம் – அதிமுகவின் திட்டம் : எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Kavi

குமரியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலம் அதிமுகவின் திட்டம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி ரூ.37 கோடி செலவில், திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 30) திறந்து வைத்தார்.

இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டிருப்பது குமரியில் தான்.

சுற்றுலா பயணிகளிடையே இந்த கண்ணாடி கூண்டு பாலம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இது அதிமுக ஆட்சிக் காலத்தில் நான் முதல்வராக இருந்த போது கொண்டுவரப்பட்ட திட்டம். கடல்வழி மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரியிடம், சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

சாகர் மாலா திட்டத்தின் கீழ் மத்திய – மாநில அரசு பங்குகளுடன் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் நிதின் கட்கரி துறை மாற்றப்பட்டது, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டார்.

அவர் சென்னை வந்தபோது தலைமை செயலகத்தின் என்னை வந்து சந்தித்தார். அவரிடமும் இந்த கோரிக்கையை வைத்தேன்.

மூன்று நாட்களிலேயே இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா வந்துவிட்டதால் அதையடுத்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது ஸ்டாலின் மாடல் அரசு டெண்டர் விட்டு, அந்த பணிகளை செய்துள்ளது” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

எ.வ.வேலு முதல் தங்கம் தென்னரசு வரை : அமைச்சர்களை பாராட்டிய ஸ்டாலின்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் : எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share