‘ஜெய் பீம்’, ‘குட் நைட்’, ‘லவ்வர்’ என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் மணிகண்டன், ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். Kudumbasthan movie zee 5
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி, இந்த படத்தில் மிடில் கிளாஸ் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளை திரையில் பிரதிபலித்திருந்தார். குரு சோமசுந்தரம், சுந்தர்ராஜன், சானே மேக்னா, பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்தர் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அழகுற வடிமைக்கப்பட்டிருந்தன.

படத்தின் பல காட்சிகள் பெரும்பாலும் பலருடைய வாழ்வில் என்றோ ஒருநாள் நடந்த ஒரு சம்பவமாகவே இருந்தது. இதனால் குடும்பம் குடும்பமாக தியேட்டர் நோக்கி வந்த மக்களால் ’குடும்பஸ்தன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. வைசாக் இசையமைத்த இப்படத்தை, சினிமாக்காரன் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஜனவரி 24-ஆம் தேதி தியேட்டரில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம், ஒரு மாதத்திற்கும் மேல் திரையரங்கில் ஓடிய நிலையில், வரும் மார்ச் 7-ஆம் தேதி Zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டரில் ‘குடும்பஸ்தன்’ படத்தை மிஸ் செய்தவர்கள், ஓடிடியில் பார்க்கலாம்.
