குபேரா : தனுஷ் எடுத்த ரிஸ்க்.. 10 மணி நேர படப்பிடிப்பு..!

Published On:

| By Minnambalam Login1

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் குபேரா. இந்த படத்தில் நடிகர் தனுஷூடன் இணைந்து நடிகர் நாகார்ஜுனா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனாவின் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழு வெளியிட்டது.

ADVERTISEMENT

இந்த படத்தில் நடிகர் தனுஷ் தெருவில் பிச்சை எடுக்கும் நபராக நடித்துள்ளார். குபேரா படம் பொலிடிகல் மாஃபியாவை மையப்படுத்தி உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் குறித்த ஒரு சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

குபேரா படத்தின் ஒரு காட்சிக்காக மும்பையில் உள்ள ஒரு பெரிய குப்பை கிடங்கில் 10 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், அந்த காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த 10 மணி நேரமும் நடிகர் தனுஷ் மாஸ்க் அணியாமல் குப்பை கிடங்கில் நடித்தாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த காட்சியை படத்தில் பார்க்கும் போது நிச்சயம் அனைவரும் கண் கலங்கி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

நடிகர் தனுஷின் அர்ப்பணிப்பை கண்ட படக்குழுவினரும் ரசிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிளஸ் டூ ஃபெயிலா? கவலைப்படாதே சகோதரா… உனக்கும் ‘கவுன்சிலிங்’ உண்டு!

திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை… காரணம் இதுதான்… அவரே வெளியிட்ட பதிவு..!

அரண்மனை 4 : மூன்று நாட்களில் இவ்ளோ கோடி வசூலா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share