அதிமுக பாஜக கூட்டணி முறிவு: சந்தேகம் கிளப்பும் அழகிரி

Published On:

| By christopher

ks alagiri doubt on admk bjp allaiance break

மறைந்த முதல்வர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த அதிமுக, பாஜகவுடனான கூட்டணியை முறித்துகொள்வதாக அதிகாரப்பூர்வமாக இன்று (செப்டம்பர் 25) அறிவித்துள்ளது.

இதனையடுத்து பல்வேறு கட்சித்தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கூட்டணி முறிவில் அதிமுக எந்தளவிற்கு உறுதியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இப்போதும் இருக்கிறது. பாஜக ஒரு அழிவு சக்தி; தீய சக்தி. அதேபோல அதிமுகவும் இன்றைய சூழ்நிலையில் ஒரு ஏற்புடைய இயக்கம் அல்ல.

அதிமுகவிற்கு மாநில நலன், தமிழர் நலன் ஆகியவற்றில் எந்தவிதமான தெளிவான கருத்தும் கிடையாது. கடந்த காலங்களில் எடப்பாடி முதல்வராக இருந்த போது, பிரதமர் மோடி கொண்டு வந்த அனைத்து திட்டத்திற்கும் ஆதரவு கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்போதும் பாஜகவுடன் கொள்கை ரீதியாக கூட்டணியை முறிக்கவில்லை. அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்ட தனிபட்ட மோதல் காரணமாகவே கூட்டணி முறிந்துள்ளது.

நாளை இந்த தனிமனித மோதல் தீர்க்கப்பட்டால் மீண்டும் கூட்டணியாக இருகட்சியினரும் கைக்கோர்த்து நடப்பார்கள்.

இன்றைக்கும் என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதெல்லாம் வார்த்தை அழகிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மனம் புண்படும் வகையில் அண்ணாமலை பேசமாட்டார்: வி.பி.துரைசாமி

பாஜக அதிமுக கூட்டணி முறிவு – அறிக்கை திருத்தம்!

இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் செயல்படாது!

வேலைவாய்ப்பு : ரூ.50,000 ஊதியத்தில் BECIL-ல் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share