பட்டப்பகலில், நடுரோட்டில் படுகொலை: தமிழக பயங்கரம்!

Published On:

| By Jegadeesh

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் வயது 28. இவர் அப்பகுதியில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கரின் மகள் சரண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ADVERTISEMENT

இந்த காதல் திருமணம் சரண்யாவின் பெற்றோருக்கு பிடிக்காத நிலையில், இன்று (மார்ச் 21 ) மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து டைல்ஸ் வேலை செய்வதற்காக காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெகனை வழிமறித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் ஜெகனின் கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளனர்.

இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையறிந்த பொதுமக்கள் சம்ப இடத்தில் கூடினர். பொதுமக்கள் வருவதற்குள் சங்கர் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தப்பித்து ஓடி விட்டனர்.

ADVERTISEMENT

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஜெகனின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஜெகனை வழிமறித்து வெட்டிக்கொன்ற சரண்யாவின் தந்தை சங்கர் தற்போது கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

நயன்தாராவால் இயக்குநருக்கு சிக்கல்!

IND vs AUS :சேப்பாக்கம் மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share