விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அது இது எது’ நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் பாலா. பின்பு பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற அவர் ‘கலக்கப்போவது யாரு’ சீசன் 6-ல் டைட்டில் வென்றார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தனது டைமிங் காமெடிகள் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைந்த பாலா ஜூங்கா, தும்பா, ஆன்ட்டி இந்தியன், நாய் சேகர் போன்ற பல திரைப்படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்துள்ளார்.
சமீப காலமாகவே நடிகர் பாலா பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ஆம்புலன்ஸ் வாங்கித் தருவது, கழிப்பறை கட்டித் தருவது, விவசாயிகளுக்கு உதவி செய்வது, மருத்துவ உதவி செய்வது, வாகனங்கள் வாங்கித் தருவது போன்ற செயல்களை செய்து வருகிறார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக அவர் செய்த உதவிகள் வைரலானது. அதோடு பாலாவின் இந்த செயல் நடிகர் ராகவா லாரன்ஸையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தனக்கு கிடைக்கும் குறைந்த சம்பளத்தில் இவ்வளவு பெரிய உதவிகளை செய்து வரும் பாலாவுடன், கைகோர்த்து நடிகர் ராகவா லாரன்ஸும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருக்கும் பாலாவை, சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாக நடிகர் லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
இது பற்றி பாலா நெகிழ்ச்சியுடன், ” இது மிகவும் முக்கியமான வீடியோ. என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத கனவை லாரன்ஸ் அண்ணன் நிறைவேற்றி உள்ளார்.
டிஜேடி பைனான்ஸ் நிகழ்ச்சியில், இவனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறேன் டைரக்டர்ஸ் கதை இருந்தால் எடுத்துட்டு வாங்க என்று அறிவித்துள்ளார்.
https://twitter.com/mazhil11/status/1779757010474643636
என் தகுதிக்கும், என் கனவுக்கும் மீறின விஷயம் இது. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க”, என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்?