ஓபிஎஸூக்கு தொடர் பின்னடைவு: கே.பி.முனுசாமி விமர்சனம்!

Published On:

| By Selvam

kp munusamy says ops backdrop

அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 11) தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்ட ரீதியாக அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவிற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்று ஓபிஎஸ் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்கிறார்.

ADVERTISEMENT

அனைத்து நீதிமன்றங்களிலும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் எந்த நீதிமன்றம் சென்றாலும் எடப்பாடி பழனிசாமி தான் வெற்றி பெறுவார்” என்று தெரிவித்தார்.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நெருங்கும் பொங்கல்… தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை!

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து ரஷீத் கான் விலகல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share