தங்கை மீது மட்டும் பாசம்… சென்னையில் கொரிய மாணவரின் விபரீத முடிவு!

Published On:

| By Kumaresan M

சென்னை அருகே 35வது மாடியில் இருந்து கொரிய நாட்டை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே நாவலூரை அடுத்த ஏகாட்டூர் ஓஎம்ஆர் சாலையில் 40 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 35வது மாடியில் தென் கொரிய நாட்டை சேர்ந்த யாங் கியூ லிம் என்பவர் மனைவி 15 வயது மகன் சினோ லிம் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது இளைய  மகள் தென்கொரியாவில் வசிக்கிறார்.

இவர், மறைமலைநகரில் உள்ள கொரிய நிறுவனம் ஒன்றில்  மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சினோ லிம், அந்த பகுதியிலுள்ள பன்னாட்டு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்கிடையே,  யாங் கியூ லிம் அலுவலக வேலையாக கடந்த வாரம் தென்கொரியாவுக்கு  சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி, மகன், மகள் ஆகிய 3 பேரும் மட்டுமே இருந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில், இவர்கள் வசிக்கும் குடியிருப்பின் பின் பக்கத்தில் பயங்கர சத்தம் கேட்டது. அங்கிருந்த  பாதுகாவலர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் சிறுவன் சிகோ லிம் சடலமாக கிடந்தான்.

விசாரணையில் ,  35வது மாடியில் வசித்து வந்த  சினோ லிம், குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகன் இறந்தது,  அவரது தாய்க்கே தெரியவில்லை.   அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்து தாயிடத்தில் தகவலை சொன்னார்கள். இதனால்,   அதிர்ச்சியடைந்த அவர் கீழே சென்று பார்த்து சிறுவனின் சடலத்தை கண்டு கதறி அழுதார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கேளம்பாக்கம்  போலீசார், வீட்டில்  சோதனை நடத்தினர். அங்கு,  சிறுவனால் கொரிய மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்தது. இறந்துபோன சினோ லிம்மின் தாயாருக்கு கொரிய மொழி மட்டுமே தெரியும்.  இதனால், அதை தமிழில் மொழி பெயர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது தந்தை வேலை செய்யும் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த அதிகாரிகள்  உதவியுடன் அந்த கடிதத்தை போலீசார் மொழி பெயர்த்தனர். அதில்,  உயிரிழந்த மாணவன் சினோ லிம், வீட்டில் நானும் எனது தங்கையும் உள்ள நிலையில், எனது தாயார் தென்கொரியாவிலுள்ள தங்கையை மட்டும் பாசத்துடன்  கவனித்து கொள்கிறார். என்னை கவனிக்காமல் அலட்சியம் செய்வதால்தான் நான் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

15 வயதில் கொரிய மாணவர் எடுத்த விபரீத முடிவு  அந்த குடியிருப்புவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 குறைந்தது தங்கம் விலை… இன்று சவரன் எவ்ளோ?

கனமழையால் பாதிப்பு : உதவிக்கரம் நீட்டிய தேமுதிக… பிரேமலதா முக்கிய அறிவிப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share