சிங்கம் சேத்துல விழுந்தா குருவி வந்து குசலம் விசாரிச்சிட்டுப் போகுமாம் . அந்தக் கதைதான்.
ரஜினி கிஷன், துவிவிகா, முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் நடிக்க, ரமேஷ் பாரதி என்பவர் எழுதி இயக்கும் ரஜினி கேங் படத்தின் ஆடியோ விழா .
படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கிறாராம் கூல் சுரேஷ் (‘அப்படி சொல்லித்தான் கூட்டிட்டுப் போனாங்க’ என்று சொல்லிவிட்டு டைரக்டரைப் பார்க்க, அவர் மவுனமாக அமர்ந்திருந்தார்) அது கூட போகட்டும் .
என்னை சில பேர் எம் ஜி ஆர் மாதிரின்னு எல்லாம் சொல்றாங்க . ஆனால் அவரு எங்க? நான் எங்க? அப்படி எல்லாம் சொல்லாதீங்க “என்றார் (சொன்னவனை சுட்டுக் கொன்னுடுங்க கூல் சுரேஷ்.)
அடுத்து பேசியதுதான் இன்னும் விவகாரம்.
“படத்தோட ஹீரோ பேரு . ரஜினி கிஷன் . அண்மையில பிரபலமானது கவுரி கிஷன். கார்த்திக் (யூ டியூபர்) அண்ணன் விளையாட்டா ஏதோ கேட்கப் போய் பெரிய பிரச்னை ஆயிடுச்சு . அவரும் என்னை மாதிரியே (??!!) ஜாலியா பேசறவர் . அதான் பிரச்னை .
அப்படித்தான் நான் ஒரு பொண்ணு கழுத்துல மேடையில மாலை போட்டேன் ( ஒரு படத்தின் விழாவில் மேடையில் அறிவிப்பு செய்து கொண்டிருந்த ஐஸ்வர்யா என்ற காம்பயர் கழுத்தில் இவர் ஒரு மாலையை டக்கென்று போட்டு விட , அவர் மாலையைக் கழட்டி வீச , பெரும் ரகளையானது. பலராலும் கண்டிக்கப்பட்ட விஷயம் அது) அதுக்குப் போய் பெருசா பிரச்னை பண்ணிட்டாங்க
ஆனா இப்பப் பாருங்க கவுரி கிஷன் மாதிரியே கார்த்திக் அண்ணனும் நேஷனல் மீடியா வரை பிரபலம் ஆயிட்டாரு .
நான் மாலை போட்ட பிரச்னையில் மன்னிப்பு எல்லாம் கேட்டேன் . ஆனா கார்த்திக் வருத்தம்தான் தெரிவிச்சாரு, அப்பதான் புரிஞ்சது .நாம கூட மன்னிப்பு கேட்காம இப்படி வருத்தம் மட்டும் தெரிவிச்சு இருக்கலாமேன்னு !
இனிமே நானும் மன்னிப்பு கேட்க மாட்டேன் . வருத்தம்தான் தெரிவிப்பேன்” என்றார் .
இதையும் ஒரு கூட்டம் கைதட்டி விசில் அடித்துப் பாராட்டியதுதான் , இளைய தலைமுறை எந்த ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய , இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றே தோன்றுகிறது
