கிச்சன் கீர்த்தனா: கொள்ளு – பார்லி கஞ்சி

By Minnambalam

|

Published on 1 Jul 2023, 6:43 AM

விடுமுறை நாளில் காலை வேளையில் டிபன் செய்வதற்கு பதிலாக இந்த கொள்ளு – பார்லி கஞ்சி செய்து சாப்பிடலாம். எளிதில் செரிமானமாகும் உணவு இது. இதைத் தொடர்ந்துப் பருகிவந்தால், உடல் உறுதி பெறும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடனடி ஆற்றல் கிடைக்கும். குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்றது. வாரத்துக்கு ஒரு நாள் என்று இந்த வீக் எண்டில் சாப்பிடலாம்.

என்ன தேவை?

ADVERTISEMENT

பார்லி, கொள்ளு – கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 3 பற்கள்
பாதாம் பருப்பு – 6
பால் – ஒன்றரை கப்

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

கொள்ளு, பார்லியைத் தனித்தனியே ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும். பார்லி, வெந்தயம், கொள்ளு, பூண்டு, பால் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட வேண்டும். பாதாமை ஊறவைத்துத் தோல் உரித்து, மைய அரைக்க வேண்டும். பிறகு, தவாவில் வெந்த கஞ்சி, பாதாம் விழுது, பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்க வேண்டும்.

ஃப்ரூட்ஸ் டிலைட்

ADVERTISEMENT

கறிவேப்பிலை தோசை

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel