பாகிஸ்தானுக்கு எதிராக விராட் அடித்த சதம்: இஸ்லாமாபாத்தில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

Published On:

| By Kumaresan M

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு நாடுகளை கடந்த ரசிகர்கள் உண்டு. அதுவும், கிரிக்கெட் உலகில் இந்தியாவின் பரம போட்டியாளராக கருதப்படும் பாகிஸ்தான் நாட்டிலும் விராட் கோலிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

நேற்று (பிப்ரவரி 23) பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 111 பந்துகளில் சதம் அடித்தார். சதம் அடித்ததும் விராட் கோலி தனது கழுத்து செயினில் அணிந்திருந்த தனது திருமண மோதிரத்துக்கு முத்தம் கொடுத்தார். இதை பார்த்து அனுஷ்கா ஷர்மாவும் அகம் மகிழ்ந்தார். kohlis pakistan fans celebrate

இது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அடித்த 51-வது சதமாகும். பாகிஸ்தான் – இந்தியா மோதிய இந்த ஆட்டத்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகண்ட திரையில் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, விராட் கோலி சதம் அடித்ததும் அவர்கள் ஆடிப்பாடி கொண்டாடினார்கள். அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினார்கள். கோலி கோலி என்று கோஷமிட்டும் மகிழ்ந்தனர்.

இந்த வீடியோவை பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் முகமது பைசன் அஸ்லாம் கான் என்பவர் ஷேர் செய்துள்ளார். “நாடு, மதத்தை தாண்டி ஒரு வீரரை மக்கள் விரும்புவது அசாதாரணமானது. உலகமெங்கும் திறமையை அங்கீகரிக்கும் பண்பு இதுவாகும்” என்று ஒருவர் இந்த வீடியோவை பார்த்து விட்டு கருத்து தெரிவித்துள்ளார்.kohlis pakistan fans celebrate

“பாகிஸ்தானுக்கு போட்டியாகவுள்ள மற்றொரு நாட்டு வீரரை மக்கள் இப்படி ரசிப்பது, மதிப்பது வேறு எங்கும் பார்க்க முடியாதது. உண்மையில் விராட் கிங்தான். அதனால்தான் இத்தகையை ரசிகர்களை அவர் சம்பாதித்துள்ளார். கிங் கோலியின் திறமைக்கு எல்லைகள் கிடையாது” என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share