ADVERTISEMENT

அரைசதம் விளாசிய கோலி: பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

Published On:

| By Jegadeesh

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் போட்டிகளின் 16 வது சீசன் ரசிகர்களின் ஆதரவுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் இன்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக விராட் கோலி , டூ பிளஸிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர்.

ADVERTISEMENT

பந்துகளை, பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடர்ந்து ஆடிய டூ பிளஸிஸ் , விராட் கோலி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

தொடக்க விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி 47 பந்துகளில் 59ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து டூ பிளஸிஸ் 56 பந்துகளில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்தது. இதனை தொடர்ந்து 175ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையடி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டெல்லியில் இரண்டாவது ஆப்பிள் ஷோரூம்: டிம் குக் திறந்து வைத்தார்!

பஞ்சாப் -பெங்களூரு: வெற்றி யாருக்கு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share