கொடநாடு விவகாரம் : எடப்பாடி வைத்த முக்கிய கோரிக்கை!

Published On:

| By Kavi

Kodanadu issue Edappadi demand

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான மான நஷ்ட ஈடு வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாஸ்டர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. Kodanadu issue Edappadi demand

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல்,

ADVERTISEMENT

உள்ளிட்டோருக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை சாட்சியப்பதிவுக்காக மாஸ்டர் நீதிமன்றத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தைப் பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகை பாலனை நியமித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது,

ஜனவரி 30, 31ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் வழக்கு நேற்று ஜனவரி 30ஆம் தேதி பட்டியலிடப்படாத நிலையில், இன்று ஜனவரி 31ஆம் தேதி பட்டியலிடப்பட்டது.

எனினும் எடப்பாடி பழனிசாமி ஆஜராகவில்லை. அவர் தரப்பில், ‘மான நஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துகளை நீக்க கோரி, எனது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு நிலுவையில் உள்ளதால் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்று வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதிக்கு திரும்ப அனுப்பியுள்ளது மாஸ்டர் நீதிமன்றம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

உடைந்த ராகுல் கார் கண்ணாடி : நடந்தது என்ன?

ரஷ்யா செல்லும் கமலின் தக் லைஃப்!

Kodanadu issue Edappadi demand

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share