கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 29) உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
இந்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் மீதான விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று (ஏப்ரல் 29) உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ் மட்டுமே நேரில் ஆஜராகினர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, சிபிசிஐடி போலீஸார் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களிடம் கூடுதல் விசாரணை நடத்தவும், மேலும், கூடுதல் சாட்சிகளிடையே விசாரணை மேற்கொள்ளவும் கால அவகாசம் கோரியது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க ED எதிர்ப்பு!
அன்று ஆளுநர்… இன்று பாஜக பிரச்சார பீரங்கி: தெலங்கானாவில் மீண்டும் தமிழிசை