மெட்ரோ: கோடம்பாக்கம் டூ போரூர்… அஸ்திவார தூண்கள் 100% நிறைவு!

Published On:

| By Selvam

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்ட திட்டம் வழித்தடம் 4-ல் 8 கி.மீ. நீளத்துக்கு கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்துக்கு இடையே அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்(CMRL) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ‘சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் (C4-ECV01) தூண்கள் அமைக்கும் பணிகள் 100% வெற்றிகரமாக முடித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. நீளத்தில் நான்கு இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் ஐந்து ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது. இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழே 2,255 அஸ்திவார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டக் குழுவும் ஒப்பந்ததாரர்களும் பல சவால்களை எதிர்கொண்டனர்.

இதில் குறிப்பாக 24.45 கி.மீ நீளத்திற்கு பொது பயன்பாட்டில் உள்ள உயர்மின் விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால் போன்ற பயன்பாடுகளை மாற்று வழியில் செயல்படுத்துதல் மற்றும் 1,200 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதை போன்ற முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வழித்தட தூண்கள் அமையவுள்ள இடங்களை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் 1,500 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதையை நீர் விநியோகத்திற்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக மாற்று வழியில் செயல்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: க்ளோ ஸ்கின் லட்டு

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: உத்தரம்!

பெர்த்தில் முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி : கங்குலி வருத்தம்!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share