கொடநாடு விவகாரம்… எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

Published On:

| By Kavi

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசிய தனபால் 1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவரது சகோதரர் தனபால், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை குற்றம்சாட்டி பேட்டி அளித்து வந்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார். அதில் தனபால் 1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

ADVERTISEMENT

ஆனால் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தனது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கறிஞர் ஆணையராக எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

அவர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு இன்று (நவம்பர் 7) நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்ப்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி , ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை எடப்பாடி பழனிசாமிக்கு மான நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

13 மாவட்டங்களில் கனமழை… எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!

அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணா… கிருஷ்ணசாமி கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share