கேரள குண்டுவெடிப்பு : யார் காரணம்?

Published On:

| By Kavi

Kochi Convention Centre Blast

போலீசில் சரணடைந்த டொமினிக் மார்டின் தான் கேரள குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் சாம்ரா சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு யெகோவா பிரிவைச் சேர்ந்த கிறித்துவர்கள் இன்று (அக்டோபர் 29) காலை 9 மணி அளவில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர். அப்போது 3 முறை குண்டு வெடித்துள்ளது. இது டிபன் பாக்ஸ் ஐஇடி வெடிகுண்டு என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம் மட்டுமின்றி டெல்லி, உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை யார் நிகழ்த்தியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தம்மன்னம் பகுதியை சேர்ந்த டொமினிக் மார்டின், இந்த குண்டுவெடிப்பை தான்தான் நிகழ்த்தியதாக திருச்சூர் அருகே இருக்கும் கொடகர காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதுதொடர்பாக கேரள ஏடிஜிபி அஜித்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை 544-இல் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 45 கிமீ தொலைவில் கொடகரா காவல் நிலையம் இருக்கிறது. அந்த நபர் காவல் நிலையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தார்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி மனோரமா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,  “நான் தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன் என மார்டின் கூறினார். கடந்த வாரம் அவர் உருவாக்கிய பேஸ்புக் சுயவிவரத்தில் தனது நோக்கத்திற்கான காரணத்தை ஏற்கனவே பதிவேற்றியதாகக் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட விசாரணையை தொடர்ந்து கேரள போலீஸ் அகாடாமிக்கு விசாரணக்காக மார்டின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதுபோன்று கூகுள் மற்றும் யூடியூபை பார்த்து டொமினிக் மார்டின் குண்டு தயாரித்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரணடவதற்கு முன்னதாக அவர் ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், 16 ஆண்டுகளுக்கு முன் இந்த மதவழிபாட்டு சபையில் உறுப்பினராக இணைந்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் போதனைகள் ‘தேச விரோதமாக’ இருப்பது போல் உணர்ந்தேன். இந்த வகையான பிரசங்கத்தை நிறுத்துமாறு நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டாலும், மதத்தின் தலைமை செவிசாய்க்க மறுத்தது.

அவர்கள் தங்கள் சபை உறுப்பினர்களை தேசிய கீதத்தைப் பாடுவதைத் தவிர்க்கச் சொன்னார்கள். இவை குழந்தைகள் உட்பட மக்களின் மனதில் விஷத்தை பரப்புவது போல் இருந்தது.

வயதுவந்த உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டாம் என்றும் சிவில் அல்லது ராணுவ சேவையில் சேர வேண்டாம் என்றும் கூறப்பட்டது.

இத்தகைய போதனைகள் சமூகத்திற்கு ஆபத்தாக இருப்பதைக் கண்டறிந்ததால் நான் அதற்கு பதிலளிக்க வேண்டியிருந்தது.

அரசியல் கட்சிகள் மதங்களுக்கு பயப்படுகின்றன, மற்ற மதங்கள் மற்றும் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் இதுபோன்ற போதனைகளுக்கு எதிராக ஒருவராவது எதிர்வினையாற்ற வேண்டும். அதனால் தான்  இப்படி செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெடிபொருட்களை சேகரித்த விவரத்தை பொதுநலன் கருதி வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் தம்மன்னம் பகுதியில் இருக்கும் டொமினிக் மார்டின் வீட்டில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அவருடைய கூகுள். யூடியூப் பிரவுசிங் ஹிஸ்டரியை ஆராய்ந்ததில் இதன் மூலம் அவர் வெடிகுண்டை தயாரிக்கும் நுட்பங்களை கற்றுக்கொண்டிருப்பது தெரியவந்தது என போலீசார் கூறுகின்றனர்.

வெடிகுண்டை வெடிக்கப் பயன்படுத்தப்படும் ரிமோட் கண்ட்ரோலின் காட்சிகள் டொமினிக்கின் தொலைபேசியில் இருந்துள்ளன.

இந்தசூழலில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. டெல்லி சென்றிருந்த கேரள முதல்வர் பினராய் விஜயனும் கேரளா திரும்பியுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. ஆனால் இந்தியா வெற்றி பெறுமா?

அமிதாப் பச்சனுடன் அசத்தும் ரஜினிகாந்த் : தலைவர் 170 அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share