Mercedes நிறுவனத்தின் புதிய கார்!

Published On:

| By Balaji

கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான Mercedes தனது AMG சீரிஸில் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. BMW M சீரிஸிலும் Audi கார்கள் RS சீரிஸிலும் Jaguar F சீரிஸிலும் வரிசையாக கார்களை வெளியிட்டு அமர்க்களப்படுத்தியது. அதன் வரிசையில் Mercedes நிறுவனமும் AMG என்ற பெயரில் 45, 63, 65 கார்களை வெளியிட்ட வரிசையில் AMG43 காரினை அறிமுகப்படுத்தியிருகிறார்கள். Mercedes நிறுவனத்தின் இந்த கார் முந்தையதை போன்று இல்லாமல் ரேஸ் கார் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. stiff suspension உடன் பவர்ஃபுல் என்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 3.0-liter V6 biturbo என்ஜின் பொருத்தியிருப்பதால்

இந்தக் காரின் வீல்கள் அதிக வேகத்தில் பிரேக் கொடுத்தாலும் தாங்கக்கூடிய அளவிலான சக்திவாய்ந்ததாக அமைக்கப்பட்டு அதன் பின்பக்கம் 69 சதவீதமும், முன்பக்கம் 31 சதவீதமும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும். அதுபோல் 9G-TRONIC ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் டெக்னாலஜியுடன் 9 கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கார்களில் இல்லாத ஒரு சிறப்பம்சமாகும். ஆனால், BMW நிறுவனம் தனது அடுத்த கார்களில் 10-ஐ தொட்டுவிடும் நோக்கில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பல புதுமைகள் வரவுள்ள இந்த Mercedes AMG43 கார் பார்ப்பதற்கு ஸ்டெயிலாக இருப்பதால் அதிகம் விரும்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share