தோனி குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்

Published On:

| By Jegadeesh

தோனி தான் என்னுடைய முதல் கேப்டன். நான் கிரிக்கெட் குறித்து பல விஷயங்களை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் தலைமையில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல், அவர்களின் தனித்துவங்களைப்பற்றி பேசியுள்ளார்.

BeerBiceps என்ற யூடியூப் சேனலில் “தி ரன்வீர் ஷோ” என்ற நிகழ்ச்சியில் நேற்று(மே 17) பேசிய கே.எல்.ராகுல்,

“தோனி தான் என்னுடைய முதல் கேப்டன். நான் கிரிக்கெட் குறித்து பல விஷயங்களை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.

மிக முக்கியமாக நெருக்கடியான நேரங்களில் களத்தில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்.

KL Rahul opens up about Dhoni

அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களுடனும் தோனி நல்லுறவை வைத்துக் கொள்வார். இதன் மூலம் தோனிக்காக மற்ற வீரர்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள்.

அவர் கூடவே அனைவரும் இருப்பார்கள். இந்த விஷயத்தையும் நான் தோனியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

விராட் கோலி குறித்து பேசிய கே.எல்.ராகுல் “விராட் கோலி தலைமையில் 6 முதல் 7 ஆண்டுகள் வரை இந்திய அணி இருந்தது.

விராட் கோலியை பொறுத்தவரை ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தரம் அவரால் மேன்மை அடைந்தது” என்றார்.

மேலும், ஒவ்வொரு வீரரின் பலம் என்ன என்பது குறித்து ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரியும். தன் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் ஆட்ட நுணுக்கத்தையும் ரோகித் சர்மா அறிந்து கொள்வார்.

ஒவ்வொரு ஆட்டத்துக்கும் அவர் தீட்டும் திட்டம் தனித்துவமிக்கதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

திமுக மீது புகார்: ஆளுநரை சந்திக்கும் ஈபிஎஸ்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வெற்றி விழா: முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share