அதிக டாட் பாலை எதிர்கொண்ட சென்னை அணியை, கிண்டல் செய்து போஸ்டர் வெளியிட்டுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. kkr teasing csk with sapling trees goes viral
நடப்புத் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் வெற்றிக்கு பிறகு, 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். புள்ளிப்பட்டியலில் 10 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
கேப்டனாக தோனி மாறிய பின்பும் கடந்த 11ஆம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் படுதோல்வியை சந்தித்தது.
மேலும் அந்த போட்டியில் 61 பந்துகளை ஏறக்குறைய 10 ஓவர்களை டாட் செய்த சென்னை அணி, நடப்பு தொடரில் அதிக பந்துகளை (246) டாட் செய்த அணி என்ற மோசமான சாதனையிலும் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் 234 டாட் பால்களை விளையாடிய கேகேஆர் அணி உள்ளது.

கடந்த சில சீசன்களாக பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காத வகையில் பவுலர்கள் டாட் பந்துகள் வீசினால் அதற்கு மரம் நடும் சூழல் பாதுகாப்பு சார்ந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 18வது சீசனை முன்னிட்டு, ஒவ்வொரு டாட் பந்துக்கும் தலா 18 மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் அதிக டாட் பந்துகளை விளையாடிய சென்னை அணியால் விரக்தியான ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மீம்களை தெறிக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
அப்படி தான் சேப்பாக்கம் மைதானமே காடாக மாறியுள்ளது போன்று ஏஐ புகைப்படம் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
அத்துடன், ’இப்படியே போனா, இந்தியாவையே காடாக சிஎஸ்கே மாற்றிவிடும்’, ’சென்னை அணி வீரர்களுக்கு இயற்கை மீது அவ்வளவு அக்கறை’, சிஎஸ்கே லோகோவில் உள்ள சிங்கத்தை காட்டுக்கு அனுப்ப சென்னை சபதம் செய்துள்ளது’ என பல மீம்ஸ்கள் இணையத்தில் சிரிக்க வைக்கின்றன.
இந்த நிலையில் சென்னை அணியின் பேட்டிங்கை விமர்சிக்கும் வகையில், “61 டாட் பாலுக்காக, 30500 மரக்கன்றுகள் நடப்பட்டன” என்று போஸ்டரை வெளியிட்டுள்ளது.
அதில் கொல்கத்தா அணியின் பவுலர்களான வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், தற்போது 5 முறை சாம்பியனான சென்னை அணியை மற்ற அணிகளும் வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கியுள்ளன.
இதனையடுத்து நாளை நடைபெற உள்ள லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.