ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி. kkr register first victory in eden gardens
ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 3) இரவு ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதல் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 60 ரன்களும், ரகுவன்ஷி 50 ரன்களும் குவித்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் (4), அபிஷேக் சர்மா (2), இசான் கிஷன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்து களம் கண்ட நிதிஷ் குமார் ரெட்டியும் 19 ரன்களில் வெளியே, அந்த அணி 44 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அதன்பின்னர் மெண்டிஸ் மற்றும் கிளாஸென் மட்டுமே ஓரளவுக்கு விளையாடினர். எனினும் அவர்களை தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் அந்த 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.