மழை காரணமாக பெங்களூர் – கொல்கத்தா போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. kkr playoff dream erased after rain at chinnasamy
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் தணிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று (மே17) மீண்டும் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருந்தது.
ஏற்கெனவே பெங்களூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்றும் மழை வெளுத்து வாங்கியது.
தொடர்ந்து மழை நீடித்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
பெங்களூர் அணி தற்போது ஒரு புள்ளி பெற்ற நிலையில், அந்த அணி 17 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.
ஆனால் வாழ்வா சாவா என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி, போட்டி ரத்தானதால் 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
