கிச்சன் கீர்த்தனா: இஞ்சி – பூண்டு – மிளகு ரசம்

Published On:

| By Selvam

kitchn keerthana ginger garlic rasam

செரிமானத்துக்கு உதவும், மழைக்காலத்துக்கேற்ற உணவுகளில் சிறந்ததாகக் கருதப்படுவது ரசம் வகைகள். இந்த இஞ்சி – பூண்டு – மிளகு ரசம் தொண்டையை இதமாக்கும்… மழைக்கால நோய்களை விரட்டும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒன்றரை கப்
பூண்டு – 6 பல்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
இஞ்சி – 2 அங்குலத் துண்டு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க… கடுகு – அரை டீஸ்பூன்
கறி வேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?  

ADVERTISEMENT

இஞ்சி, பூண்டு மற்றும் மிளகை அம்மியில் நசுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சீரகம், நசுக்கிய இஞ்சி, பூண்டு,  மிளகைச் சேர்த்து வதக்கி, பருப்புத் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு,  பெருங்காயத்தூள் தூவி ஒரு கொதிவிட்டு இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவவும். இதை அப்படியே பருகலாம். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

‘அனிமல்’: பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு?

அடுத்த 6 மணி நேரத்தில் சென்னையில் மழை குறையும்: பாலச்சந்திரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share