டயட் உணவான சப்பாத்தியை ஹெல்த்தியான உணவாக செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ஓமம் புதினா சப்பாத்தி ரெசிப்பி. டயட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல… வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்றது இந்த சப்பாத்தி. kitchen : omam puthina chappathi
என்ன தேவை?
கோதுமை மாவு – 200 கிராம்
பொடியாக நறுக்கிய புதினா – ஒரு கைப்பிடி அளவு
ஓமம் – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புதினாவை எண்ணெய் விட்டு வதக்கவும். கோதுமை மாவுடன் வெண்ணெய், ஓமம், புதினா, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். மாவை சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு வாட்டி எடுக்கவும். புதினா வாசனையும் ஓமத்தின் சுவையும் சேர்ந்து புதுவித ருசியுடன் இருக்கும் இந்த சப்பாத்தி.