திடீர் விருந்தினர்களின் வருகையின்போது என்ன செய்வது என்று குழம்புவோம். அப்படிப்பட்ட நேரத்தில் இந்த ஃப்ரெஷ் கோகனட் பிஸ்தா க்ரீம் செய்து அசத்தலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு கப் (கடைகளிலும் ரெடிமேடாகக் கிடைக்கிறது)
வறுத்த பிஸ்தா – 150 கிராம்
நாட்டுச் சர்க்கரை – ஒரு கப்
ஃபிரஷ்ஷான ஸ்ட்ராபெர்ரி – ஒரு கப்
எப்படிச் செய்வது?
ஸ்ட்ராபெர்ரி தவிர மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இதை ஒரு மணி நேரம் குளிரவைக்கவும். ஸ்ட்ரா பெர்ரியை அதில் டிப் செய்து சாப்பிடும்படி இரண்டையும் ஒன்றாகப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உசுரே நீ தானே… நீ தானே: அப்டேட் குமாரு