கிச்சன் கீர்த்தனா : பேபி கார்ன் மசாலா பக்கோடா

Published On:

| By christopher

பள்ளிக்குச் சென்று மாலை நேரத்தில் பசியுடன் திரும்பும் குழந்தைகளுக்கு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸுக்கு பதிலாக இந்த டிஷ்ஷை செய்து கொடுக்கலாம். குழந்தைகள் மட்டுமல்ல… அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சத்தான மாலை சிற்றுண்டியாகவும் அமையும்.

என்ன தேவை?
பேபி கார்ன் (வட்டமாக நறுக்கியது) – 2 கப்
பச்சை வேர்க்கடலை – அரை கப்
வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் – கால் கப்
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – அரை கப்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – கால் கப்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சித் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் எண்ணெய் தவிர மற்றவற்றை வாய் அகன்ற பவுலில் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மாவை உதிரி உதிரியாகப் போட்டு பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் கார்ன் பக்கோடா தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு!

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு: அப்டேட் குமாரு

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share