விருந்தினர்களின் வருகையின்போது வித்தியாசமான, சுவையான சைடிஷ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முருங்கைக்காய் முந்திரி பொரியல் செய்து அசத்தலாம். நார்ச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ள முருங்கைக்காய் முந்திரி பொரியல் அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
முருங்கைக்காய் – 2
முந்திரிப்பருப்பு – 25 கிராம்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு மீடியம் ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கரம் மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கடுகு – ஒரு சிட்டிகை
சீரகம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 75 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
முந்திரிப்பருப்பை எண்ணெயில் வறுக்கவும். வாணெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். இதனுடன் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுதைப் போட்டுக் கிளறி, ஒரு டம்ளர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கிரேவி பதம் வந்ததும் முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முப்பாட்டன் முருகன் முத்தமிழ் பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு
தங்கம் தென்னரசு வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி!