பெண் தெய்வங்களை மட்டுமல்ல, பெண்களையும் போற்றும் பண்டிகை நவராத்திரி. நவராத்திரியின் ஒன்பது நாள்களும் உறவுகளையும் நண்பர்களையும் அழைத்து விருந்தோம்பி மகிழும் உற்சாகம், நவராத்திரியின்போது பெண்களைத் தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் இன்றைக்கு வீட்டுக்கு வருபவர்களுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று நினைப்பவர்கள், இந்த வரகரிசி கல்கண்டு பாத் செய்து கொடுத்து அசத்தலாம்.
என்ன தேவை?
வரகரிசி – அரை கப்
டைமண்ட் கற்கண்டு – முக்கால் கப்
பால் – மூன்று கப்
பச்சைக்கற்பூரம் – ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 6
நெய் – மூன்று டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வரகரிசியை மூன்று முறை கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். டைமண்ட் கற்கண்டை மிக்ஸி ஜாரில் பொடித்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் பால் சேர்த்து கொதிவந்ததும் ஊறவைத்த வரகரசியை சேர்த்து மிதமான சூட்டில் வேகவிடவும். நடுவே கிளறிக்கொண்டே இருக்கவும். வரகரிசி பூவாக வெந்ததும் பொடித்த கற்கண்டை சேர்த்துக் கலந்து கொள்ளவும். அவை கரைந்து சேர்ந்த பின் நெய் சேர்த்து கைவிடாமல் சில நிமிடங்கள் கிளறவும். கலவை கெட்டியான பின்னர் பச்சைக்கற்பூரம், ஏலக்காய்த்தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இது ரொம்ப முக்கியமாக விஷயம் : அப்டேட் குமாரு
சென்னை மெட்ரோ 2 : நிதி ஒதுக்கி ஒப்புதல்!