டலுக்கு வலுசேர்க்கும் பாரம்பரிய ஸ்நாக்ஸ் வகையில் பொருள்விளங்கா உருண்டைக்குத் தனியிடம் உண்டு. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கனிமச்சத்துகள் உள்ளதால் வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது. பள்ளியிலிருந்து பசியோடு திரும்பும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
**என்ன தேவை?**
பச்சரிசி – ஒரு கப்
பொட்டுக்கடலை – ஒரு கப்
வேர்க்கடலை – 2 கப்
ஏலக்காய் – 3
வெல்லம் – 400 கிராம்
தண்ணீர் – அரை கப்
கொப்பரை நறுக்கியது – அரை மூடி
பொட்டுக்கடலை மற்றும் அரிசி மாவு – தலா கால் கப்
**எப்படிச் செய்வது?**
பச்சரிசியை நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு வேர்க்கடலை, பொட்டுக்கடலையையும் வறுக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பொடித்துவைக்கவும். ஒரு கடாயில் வெல்லத்தில் நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி அதை ‘உருட்டுப் பதம்’ வரும் வரையில் நன்கு காய்ச்சி, பிறகு அதில் கொப்பரை, வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அரிசி மாவு சேர்த்து அடுப்பை அனைத்து நன்கு கிளறிவைக்கவும். தனியாக ஒரு தட்டில் அரிசி மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும். கடாயில் உள்ள கலவையை உருண்டையாகப்பிடித்து அரிசி மாவில் புரட்டி உருட்டியெடுத்தால், பாரம்பரியமிக்க பொருள்விளங்கா உருண்டை தயார்.
**[நேற்றைய ரெசிப்பி: தேன் மிட்டாய்!](https://minnambalam.com/public/2022/06/17/1/honey-candy)**
