கிச்சன் கீர்த்தனா: தக்காளி ரசம்!

Published On:

| By Balaji

சமீபத்தில் மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு அளிக்கப்பட்ட இரவு விருந்தில் இடம்பெற்ற தக்காளி ரசம், ரசத்திலேயே மிகவும் சுவையானது. மேலும் தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. எனவே, அத்தகைய தக்காளியை வைத்து ரசம் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துகளைப் பெறலாம். செய்வதும் சுலபம்.

**என்ன தேவை?**

ADVERTISEMENT

தக்காளி – 3

துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்

ADVERTISEMENT

மிளகு – 2 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

ADVERTISEMENT

கடுகு – அரை டீஸ்பூன்

பூண்டு – 6 பல்

பச்சை மிளகாய் – ஒன்று

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பைக் கழுவிப் போட்டு, அத்துடன் தக்காளியையும் போட்டு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதில் அரைத்துவைத்துள்ளதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் தக்காளியைப் போட்டு, உப்பு சேர்த்து இரண்டு கொதிவிட்டு இறக்க வேண்டும். இதில் கொத்தமல்லியைப் போட்டு சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறவும்.

[நேற்றைய ரெசிப்பி: கல்யாண ரசம்](https://minnambalam.com/k/2019/11/14/2)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share