சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போன்றவற்றை சுலபமாகச் செய்து அசத்தும் நம்மில் பலர்… மீன் பிரியாணி செய்ய சற்று தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய இந்த செட்டிநாடு ஸ்டைல் மீன் பிரியாணியை சண்டே ஸ்பெஷலாகச் செய்து பாருங்களேன்.
சீரக சம்பா அரிசியில் செய்யும் மீன் பிரியாணி கூடுதல் சுவையாக இருக்கும். இந்த பிரியாணிக்கு வஞ்சிரம் மீன் ஏற்றது. மீன் துண்டுகளின் அளவுக்கு ஏற்ப இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு எலுமிச்சைச்சாறு, சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் சீரகத்தூள், உப்பு எல்லாம் சேர்ந்து விழுதுபோல் செய்து சுத்தப்படுத்திய மீன் துண்டுகளில் நன்கு ஊற வைக்கவும். பிறகு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய்விட்டு மிதமான தீயில் பாதி அளவு வாட்டி எடுக்கவும்.
பிரியாணி செய்ய தேவையான அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். அதில் எலுமிச்சைச்சாறு சேர்த்து தொக்குபோல ஆனதும் (ஒரு கிலோ சீரக சம்பா அரிசிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து) ஊறவைத்த சீரக சம்பா அரிசி, தேவையான அளவு புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். அதில் வாட்டி எடுத்த மீன் துண்டுகள் சேர்த்து மேலே வாழையிலையை வைத்து 20 நிமிடங்கள் `தம்’ போட்டு இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இனிமேல் காந்திய பாதை தான்… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ராஜ்நாத் சிங் வருகை…பாஜக கேட்ட 100 சீட்… திமுகவின் ரியாக்ஷன்!
