ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: ஸ்டஃப்டு குழிப் பணியாரம்

Published On:

| By christopher

stuffed kuzhipaniyaram

தென்னிந்தியாவின் பிரபலமான உணவு குழிப்பணியாரம். விதம்விதமான குழிப்பணியாரங்கள் இருந்தாலும், தொட்டு சாப்பிட சட்னி ஒன்று தேவைப்படும். இந்த  ஸ்டஃப்டு குழிப்பணியாரத்துக்கு தொட்டுக்கொள்ள ஒன்றும் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். Stuffed kuzhipaniyaram

என்ன தேவை?

ADVERTISEMENT
ADVERTISEMENT

பணியார மாவுக்கு…
பச்சரிசி – ஒரு கப்
இட்லி அரிசி – ஒரு கப்
ஜவ்வரிசி – கால் கப்
உளுந்து – அரை கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
புளித்த இட்லி மாவு – 2 கரண்டி
உப்பு – தேவையான அளவு
ஸ்டஃபிங் செய்ய…
உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
பணியாரம் சுட்டெடுக்க…
நல்லெண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

பச்சரிசி, இட்லி அரிசியை நன்றாக அலசி ஜவ்வரிசி சேர்த்து ஒன்றரை மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை அலசி வெந்தயம் சேர்த்து ஒன்றரை மணி நேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறிய உளுந்தை முதலில் மிக்ஸியில் அரைக்கவும். ஊறிய அரிசியை இரண்டாவதாக அரைக்கவும். அரிசி மாவையும், உளுந்து மாவையும் ஒன்றாகக் கலந்து உப்பு, புளித்த இட்லி மாவு சேர்த்து 6 மணி நேரம் புளிக்கவைக்கவும்.

ஸ்டஃபிங் செய்வது எப்படி?

ADVERTISEMENT

உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து துருவிக்கொள்ளவும். வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி துண்டை துருவிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக்கொள்ளவும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி ஒரு கரண்டி தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சுண்டும்போது துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாகக் கலக்கவும். Stuffed kuzhipaniyaram

பணியாரம்  செய்வது எப்படி?

நான் – ஸ்டிக் குழிப்பணியாரக்கல்லை அடுப்பில்வைத்து எல்லா குழிகளிலும் அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் ஒரு டீஸ்பூன் மாவை எல்லா குழிகளிலும் ஊற்றவும். ஸ்டஃப்பிங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாவின் மேல் வைத்து மீண்டும் ஒரு டீஸ்பூன் மாவை அதன் மேல் ஊற்றவும். நன்றாகச் சிவந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கமும் சிவக்கவிடவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வேட்டி மட்டுமா இல்லன்னா…: அப்டேட் குமாரு

தீபாவளி பண்டிகை: மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share