கிச்சன் கீர்த்தனா: ஸ்பைஸி கார்ன் – பொட்டேட்டோ நக்கட்ஸ்

Published On:

| By Selvam

kitchen keerthana spicy corn

சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃபிரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் இன்றைய நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகளாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றன.

அதிலும் எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து எடுக்கப்படும் வகைகள்தான் அதிகம் என்கிற நிலையில் வீட்டிலேயே சத்தான இந்த ஸ்பைஸி கார்ன் – பொட்டேட்டோ நக்கட்ஸ் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாமே! kitchen keerthana spicy corn

ADVERTISEMENT

என்ன தேவை?

வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு – ஒன்றரை கப்
ஸ்வீட் கார்ன் முத்துகள் – அரை கப்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பார்மேசன் சீஸ் (துருவியது) – 2 டேபிள்ஸ்பூன்
பதப்படுத்திய மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் (டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும்) – அரை டீஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய் – அரை டீஸ்பூன்
பூண்டுப் பல் – 2 (துருவவும்)
பிரெட் தூள் – கால் கப்
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன் (கால் கப் தண்ணீரில் கரைக்கவும்)
பிரெட் தூள் (கடைசியில் புரட்ட) – அரை கப்
உப்பு – தேவைக்கேற்ப    

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

எண்ணெய், சோள மாவு கரைசல், கடைசியில் புரட்ட வைத்திருக்கும் அரை கப் பிரெட் தூள் தவிர, கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள் அனைத்தையும் கலந்து பிசைந்து, ஒரு மூடியைக் கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

ADVERTISEMENT

பின்னர் எடுத்து கையில் எண்ணெய் தடவிக்கொண்டு கலவையை இரண்டு கைகொண்டு, திரிப்பது போல குழல் வடிவில் (பைப் மாதிரி) நீளமாக உருட்டவும். உருட்டியதைக் கத்திகொண்டு அரை இன்ச் கனத்துக்கு வெட்டவும். இந்தத் துண்டுகளை மீண்டும் ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்து, இரண்டு ஓரங்களிலும் லேசாகத் தட்டி, சோள மாவு கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில், கொஞ்சம் கொஞ்சமாக மிதமான தீயில் பொரிக்கவும்.

குறிப்பு: சீஸில் உப்பு இருப்பதால், உப்பைப் பார்த்து சேர்க்கவும்

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share