இந்தப் பெயரையும் படத்தையும் பார்த்ததும் நாம் பொங்கல் செய்ய போகிறோமா… கேக் செய்ய போகிறோமா என்று யோசிக்கலாம். உண்மையில் இது பொங்கலேதான். இந்த வீக் எண்டில் வீட்டிலுள்ளவர்களை இந்த பொங்கல் செய்து அசத்தலாமே!
என்ன தேவை?
சால்டட் கேரமல் செய்ய…
சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் – தலா ஒரு கப்
வெனிலா எசென்ஸ், உப்பு – தலா அரை டீஸ்பூன்
பொங்கல் செய்ய…
பச்சரிசி – அரை கப்
பால், தண்ணீர் – தலா ஒரு கப்
எப்படிச் செய்வது?
அரிசியுடன் பால், தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சிறிது நேரத்தில் சர்க்கரை இளகி, தேன் கலரில் வரும். பிறகு சிறிது சிறிதாக க்ரீமை சேர்த்துக் கிளறி, கலவை கெட்டியாக வரும்போது இறக்கவும். அதனுடன் உப்பு, வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதுவே சால்டட் கேரமல். வெந்த பொங்கலுடன் கேரமல் சேர்த்துக் கலந்து சூடாக்கி, இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். இளம் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே அசிங்கமா போச்சு… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் சிக்னல்… போலீஸ் ஸ்கெட்ச் ரெடி… சீமான் கைது?