கிச்சன் கீர்த்தனா : ரெட் வெல்வெட் பொங்கல்

Published On:

| By christopher

கேக்கில் மட்டும்தான் ரெட் வெல்வெட் வகையா? வீட்டில் உள்ள பொங்கலிலும் ரெட் வெல்வெட் பொங்கல் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும். பொங்கல் வேண்டாம் என்று ஒதுக்குபவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

என்ன தேவை?
பச்சரிசி – முக்கால் கப்
வெங்காயம் –  ஒன்று (மெல்லியதாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பீட்ரூட் – ஒன்று (தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்கவும்)
பச்சை மிளகாய் – பாதி
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பொடித்த முந்திரி – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க…
வடிகட்டிய கெட்டித்தயிர் – ஒரு கப்
மிளகுத்தூள், பொடித்த முந்திரி – சிறிதளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  – சிறிதளவு

எப்படிச் செய்வது?
குக்கரில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் பீட்ரூட், உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் பீட்ரூட்டைத் தனியாக எடுத்து நைஸாக அரைத்து எடுக்கவும். அதே தண்ணீரில் பச்சரிசியைச் சேர்த்து, குக்கரில் போட்டு மிதமான தீயில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

பிறகு சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவும். ஆவி அடங்கியபின் குக்கரைத் திறந்து அரைத்த பீட்ரூட் விழுது, பொடித்த முந்திரி சேர்த்து சுருள கிளறி இறக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் ஆறியதும் கெட்டித்தயிர் சேர்த்து மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை, முந்திரி தூவிப் பரிமாறவும்.

சார்னு சொன்னாலே பக்குன்னு இருக்கு அப்டேட் குமாரு

இனிமே இதுதான் கிங்… பிடிஆர் போட்ட மாஸ்டர் பிளான் – அசந்து போன ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share