இந்த ஆயுத பூஜை திருநாளில் கடைக்குச் சென்று ஸ்வீட்ஸ் வாங்காமல் வீட்டிலேயே செய்து அனைவரையும் அசத்த, இந்த ராகி லட்டு ரெசிப்பி உதவும். காசும் மிச்சமாகும்.
என்ன தேவை?
ராகி (கேழ்வரகு) மாவு – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – கால் கப்
சூடான பால் – 2 அல்லது 3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
முந்திரி – 5
எப்படிச் செய்வது?
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடராக்க வும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் வறுத்தெடுக்கவும். அதே வாணலி யில் ராகி மாவைச் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து ஆறவைக்கவும். மாவு சூடு ஆறியதும் அதில் சர்க்கரை பவுடர், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், சூடான பால் சேர்த்து நன்கு கலக்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, மாவை லட்டுகளாகப் பிடிக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேல சொல்லியே உசுர வாங்குறாங்க: அப்டேட் குமாரு
ஓபிஎஸ் முதல் விஜய் மனைவி சங்கீதா வரை… முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி!