உணவகங்களில் விதம்விதமான பராத்தாக்கள் வந்துவிட்டாலும், வீட்டில் செய்யும் பராத்தாவுக்கு ஈடாகாது. அந்த வகையில் எல்லாருக்கும் ஏற்ற ஹெல்த்தி பராத்தாவாக இந்த முள்ளங்கி பராத்தா அமையும். கோடைக்கேற்ற பராத்தாவாகவும் இது அமையும். kitchen keerthana Radish Paratha 21
என்ன தேவை? kitchen keerthana Radish Paratha 21
துருவிய முள்ளங்கி – முக்கால் கப்
கோதுமை மாவு – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒன்றே கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்/நெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது? kitchen keerthana Radish Paratha 21
முள்ளங்கியைக் கழுவித் துருவி அதைப் பிழிந்து தண்ணீரைத் தனியாக வைக்கவும். முள்ளங்கி சக்கையில் உப்பு கலந்து பத்து நிமிடம் தனியாக வைக்கவும். ஒரு பவுலில் ஊறிய முள்ளங்கி, தேவையானவற்றில் எண்ணெய் நீங்கலாக உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். தேவைப்பட்டால், முள்ளங்கித் தண்ணீரைச் சேர்த்துப் பிசையவும்.
முள்ளங்கியில் தண்ணீர் இருக்கும் என்பதால் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். பிசைந்த சப்பாத்தி மாவை சின்னச்சின்ன உருண்டைகளாகப் பிரிக்கவும். ஒவ்வொரு உருண்டையையும் மாவு தொட்டு இரண்டு சப்பாத்திகளின் அடர்த்தி போல சற்று கனமான பராத்தாக்களாக உருட்டவும். அடுப்பில் தவாவை வைத்து, சிறிது எண்ணெய்/நெய் விட்டு பராத்தாக்களைச் சுட்டெடுத்துப் பரிமாறவும்.