கிச்சன் கீர்த்தனா : முள்ளங்கிச் சட்னி

Published On:

| By christopher

Kitchen Keerthana: Radish Chutney

தினசரி சமையலில் குழம்பு, பொரியல் வகையில் மட்டுமல்லாமல் முள்ளங்கியில் சட்னியும் செய்து அசத்தலாம். ரத்த சுத்திகரிப்பைச் செய்யும் தன்மை கொண்ட இந்த முள்ளங்கி சட்னி அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.

என்ன தேவை?
கடலைப்பருப்பு – 60 கிராம்
கறுப்பு உளுந்து – 60 கிராம்
காய்ந்த மிளகாய் – 4 – 6
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – கால் இன்ச் துண்டு
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
எண்ணெய் – தேவையான அளவு

ADVERTISEMENT

தாளிப்பதற்கு…
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு

சட்னிக்கு…
முள்ளங்கி – ஒன்று (துருவவும்)
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (நறுக்கவும்)
புளி, உப்பு – சிறிதளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும்  முதலில் குறிப்பிட்டுள்ள   எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்… அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்துவைத்த இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

ADVERTISEMENT

சட்னி செய்ய…
முள்ளங்கி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் வதக்கி, அதனுடன் உப்பு, புளி மற்றும் இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸ், சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் கழித்து இறக்கிவிடவும். சுவையான, புது வகையான முள்ளங்கிச் சட்னி தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

குறிப்பு:
வேண்டுமென்றால், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி?: டிடிவி தினகரன், அண்ணாமலை பேட்டி!

ஒரே நாடு ஒரே புயல் : அப்டேட் குமாரு

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share