கிச்சன் கீர்த்தனா : இறால் தொக்கு தோசை

Published On:

| By christopher

மொறுமொறு தோசைக்கு கொஞ்சம் காரமான சைடிஷ் இருந்தால் சுவையாக இருக்கும் என்று சில நேரங்களில் நினைக்க தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் தோசைக்குள்ளேயே வைத்து செய்யப்படும் இந்த இறால் தோசை சூப்பராக சாய்ஸாக அமையும்.

என்ன தேவை?
தோசை மாவு – ஒரு கப்
இறால் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகம் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
முட்டை – 2
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன், தேவையானவற்றில் கொடுத்துள்ள முட்டை, தோசைமாவு நீங்கலாக மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து வதக்கவும். இறுதியில், முட்டையை உடைத்து ஊற்றி இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு், மெல்லிய தோசைகளாக வார்க்கவும். இதன் மீது ஏற்கெனவே செய்து வைத்துள்ள மசாலாக் கலவையை வைத்து சுற்றிலும் எண்ணெய் விடவும். பிறகு, தோசையை அப்படியே சப்பாத்தி போல் சுருட்டி எடுத்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: நெல்லை, கோவை… இரண்டு மேயர்கள் மட்டும்தானா? தொடரும் ஹிட் லிஸ்ட்!

அடுத்த கைலாசா தீவு : அப்டேட் குமாரு

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share