பெஸ்டோ என்பது இத்தாலி உணவு வகை. இதை நாம் சாப்பிடும் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். கடைகளிலும் கிடைக்கும். அதைத் தவிர்த்து வீட்டிலேயே பெஸ்டோ தயாரித்து, பனீருடன் சுவையான பொங்கல் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
பொங்கல் செய்ய…
பச்சரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – 1/8 கப்
வெஜிடபிள் ஸ்டாக் (அ) தண்ணீர் – 4 கப்
பனீர் – 100 கிராம் (சிறிய துண்டுகளாக்கவும்)
பெஸ்டோ செய்ய…
கொத்தமல்லித்தழை – 2 கப்
முந்திரி குருணை – அரை கப்
எண்ணெய் – கால் கப்
பச்சை மிளகாய் – ஒன்று (நடுத்தர அளவு)
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியுடன் பருப்பு சேர்த்துக் கழுவவும். அதனுடன் வெஜ் ஸ்டாக் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு பனீர் துண்டுகளை அடுக்கி இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். வெறும் வாணலியில் முந்திரி குருணையைச் சேர்த்து வறுத்து எடுத்து, பெஸ்டோ செய்ய கொடுத்துள்ள மற்ற பொருள்களுடன் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வெந்த பொங்கலுடன் பனீர் துண்டுகள், அரைத்த விழுது சேர்த்துச் சூடாக்கி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு வேட்பாளர்… ஸ்டாலினிடம் உதயநிதி கேட்கும் ஒரே விஷயம்!