கிச்சன் கீர்த்தனா: பனீர் பக்கோடா

Published On:

| By Balaji

mபுரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்களின் வீடுகளில், ‘எப்பம்மா புரட்டாசி மாதம் போகும்?’ என்ற கேள்வியை இப்போது கேட்கத் தொடங்கியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, ‘இன்னும் ஒருவாரம்தான். அடுத்த வாரம் போயிடும்’ என்ற பதிலைச் சொல்லிவிட்டு, இந்த பனீர் பக்கோடாவைச் செய்து கொடுங்கள். புரட்டாசி மறந்துவிடும்; இன்னொரு முறையும் இந்த பனீர் பக்கோடாவைச் செய்ய சொல்லும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

பனீர் – 150 கிராம்

கடலை மாவு – ஒரு கப்

ADVERTISEMENT

அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

ADVERTISEMENT

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

ஓமம் – சிறிதளவு (விருப்பப்பட்டால்)

உப்பு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பனீரைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதனுடன் தேவையான தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இதில் நறுக்கிவைத்துள்ள பனீர் துண்டுகளை முக்கியெடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். இதை கொத்தமல்லி, புதினா சட்னியுடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share