காளான்களின் செய்யப்படும் உணவுகளுக்குத் தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக, காளானில் செய்யப்படும் வறுவலுக்கு தனியிடம் உண்டு. அப்படிப்பட்ட வறுவலை நீங்களும் செய்ய இந்த ரெசிப்பி உதவும். இது அனைத்துவித உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாகவும் இருக்கும்.
என்ன தேவை?
காளான் – 200 கிராம்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
பட்டை – 4 துண்டு
கிராம்பு – 4
பிரியாணி இலை – ஒன்று
சோம்புத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – 6 பல்
இஞ்சி – அரை அங்குலத்துண்டு
முந்திரிப்பருப்பு – 6
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்புத்தூள், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, நசுக்கிய இஞ்சி, பூண்டு தாளித்து வெங்காயம், தக்காளி, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் நீளவாக்கில் பாதியாக நறுக்கிய காளான் சேர்த்து சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். நன்றாக சுருண்டு வரும்போது மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.