ம் இந்திய உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளும் முக்கியமானவை. உதாரணமாக, பூண்டு உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும். மஞ்சள், வெந்தயம், இஞ்சி, சீரகம் போன்ற மசாலா பொருள்கள் சுவையையும் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளையும் சேர்க்கின்றன. அந்த வகையில் இந்த முள்ளங்கி முளைப்பயறு சப்ஜி வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியம் தருவது.
**என்ன தேவை?**
முள்ளங்கி – ஒன்று
முளைப்பயறு – கால் கப்
தக்காளி – இரண்டு
பச்சை மிளகாய் – ஒன்று
சீரகம் – கால் டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – மூன்று டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
முள்ளங்கியைத் தோல் சீவி, வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்துக் கொள்ளவும். அகலமான சிறிய கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதோடு இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து லேசாக வதங்கியதும் தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும். தக்காளி விழுது வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் முளைப்பயறு, முள்ளங்கியைச் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கைவிடாமல் வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து வேகவைக்கவும். அவை வெந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
**[எடைக்குறைப்புக்கு எது பெஸ்ட்… உணவுக்கட்டுப்பாடா, உடற்பயிற்சியா?](https://minnambalam.com/public/2022/06/19/1/sunday-best-food-for-weight-loss)**