காலநிலை மாற்றத்தால்யாரைப் பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி என ஏதோ ஒரு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். இப்போதைக்கு நமக்குத் தேவை நோய் எதிர்ப்பாற்றல். உணவின் மூலம் அதை உறுதிப்படுத்தும் வகையில் வாரத்தின் முதல் வேலை நாளில் இந்த முடக்கத்தான்கீரை தோசை செய்து வீட்டிலுள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
தோசை மாவு – 3 கப்
முடக்கத்தான்கீரை – கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
முடக்கத்தான்கீரை – கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முடக்கத்தான்கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை தோசை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (மாவிலேயே உப்பு இருக்கும். தேவைப்பட்டால், சிறிதளவு உப்பு சேர்க்கலாம்). தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிதளவு எண்ணெய் தடவி, மாவைத் தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகு சேர்த்தும் அரைக்கலாம்.
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகு சேர்த்தும் அரைக்கலாம்.