சிறுதானிய மோகம் அதிகரித்துவரும் நிலையில் இந்த நவராத்திரி நன்னாளில் சத்தான இந்த பொரிவிளங்காய் உருண்டை செய்து வீட்டிலுள்ளவர்களையும் வீட்டுக்கும் வரும் விருந்தினர்களையும் அசத்தலாம்.
என்ன தேவை?
ராகி (கேழ்வரகு) – கால் கப்
கம்பு – கால் கப்
வரகு – கால் கப்
கோதுமை – கால் கப்
கொள்ளு – கால் கப்
பாசிப்பருப்பு – அரை கப்
வெல்லம் – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
சுக்குப்பொடி – கால் டீஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
தானியங்கள் மற்றும் பருப்பை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரையும்வரை கொதிக்கவைத்து, வடிகட்டி, மீண்டும் கெட்டியாக பாகு காய்ச்சவும். பாகை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலந்து, கையில் நெய்யை தொட்டுக்கொண்டு உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விடைபெற்றார் தொழிலதிபர் ரத்தன் டாடா
டிஜிட்டல் திண்ணை: உண்மையை உடைத்த உதயநிதி… உஷ்ணத்தில் ‘சாம்சங்’ கூட்டணி!