தீபாவளி ஸ்பெஷலாக எத்தனையோ இனிப்பு, பலகார வகைகள் இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட சிலவற்றின் மீது அலாதி பிரியம் உண்டு. அவற்றில் முக்கியமானது அதிசரம். அந்த அதிசரத்தைச் சத்தானதாக்க இந்த மாப்பிள்ளை சம்பா அதிரச ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – தலா ஒரு கப்
பச்சரிசி மாவு – 4 டேபிள்ஸ்பூன்
பாகு வெல்லம் – ஒன்றே கால் கப் (பாகு வெல்லம் என்று கேட்டு வாங்குங்கள்)
ஏலக்காய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மாப்பிள்ளை சம்பா அரிசியைக் கழுவி நான்கு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்து நிழலில் உலரவிடவும். அரிசி முக்கால் பதம் உலர்ந்ததும் மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும். அரைத்த மாப்பிள்ளை சம்பா அரிசி மாவுடன் பச்சரிசி மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாகு வெல்லத்தைச் சேர்த்து தண்ணீர் விட்டு கரையவிடவும். வெல்லக்கரைசல் உருட்டு பதத்துக்கு வரும்வரை காய்ச்சி அடுப்பை அணைக்கவும். இத்துடன் மாவைச் சேர்த்துக் கிளறவும். பிறகு, மாவை ஆறவிட்டு மூடி வைக்கவும். மறுநாள் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து அதிரசம் பதத்துக்கு தட்டிவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் தட்டியவற்றைச் சேர்த்து செக்கோ எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு, ஜல்லிக்கரண்டியால் அதிரசத்தை அழுத்தி எண்ணெய் வடிந்ததும் ஆறவிட்டுப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இப்பவே கண்ணக்கட்டுதே… அப்டேட் குமாரு