சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டையில் ரசம் வைத்து அசத்த இந்த ரெசிப்பி உதவும். கோடையில் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகளைச் சரி செய்யும் திறன் இந்த மாங்கொட்டைக்கு ரசத்துக்கு உண்டு.
என்ன தேவை?
வெந்நீரில் கழுவி சுத்தம் செய்த மாங்கொட்டை – 4
துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒரு கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் – 3
நறுக்கிய தக்காளி – ஒன்று
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
பூண்டு – 5 பற்கள்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவுஎப்படிச் செய்வது?
மிளகு, சீரகம் இரண்டையும் நுணுக்கிக் கொள்ளவும். பிறகு இதனுடன் பூண்டு சேர்த்துத் தட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளிக்கவும்.
பின்னர் இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீரைச் சேர்க்கவும். பிறகு இதில் மாங்கொட்டையைச் சேர்த்து நன்கு வேகவிடவும். பின்னர் இதில் மிளகு, சீரகம், பூண்டுக் கலவையையும், தேவையான உப்பையும் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும்.