கிச்சன் கீர்த்தனா : கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் ரசகுல்லா!

Published On:

| By christopher

Kitchen Keerthana: Krishna Jayanti Special: Rasgulla can be done at home!

இந்தியத் துணைக்கண்டத்தின் பிரபலமான இனிப்பு ரசகுல்லா. இது தங்களது பாரம்பர்ய இனிப்பு என மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா மாநிலங்கள் உரிமை கொண்டாடுகின்றன. அது அப்படியே இருக்கட்டும். நாளை (ஆகஸ்ட் 26) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடும் சந்தோஷமான நேரத்தில் வீட்டிலேயே ரசகுல்லா செய்து  ஸ்வீட்டோடு கொண்டாடுங்க மக்களே!

ஒரு லிட்டர் பாலைக்  காய்ச்சி, சூடாக இருக்கும்போதே மூன்று டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பால் திரிய ஆரம்பிக்கும். பிறகு சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டவும். தண்ணீர் வடிந்தபின் வடிகட்டியில் பனீர் தங்கும். நன்றாகப் பிழிந்து எடுத்து பனீரை மிருதுவாக வரும்வரை பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையுடன் இரண்டு கப் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். இதில் உருண்டைகளைப் போடவும். பிறகு சிறு தீயில் வைத்து வேகவிடவும். உருண்டை கொஞ்சம் பெரிதானதும் கீழே இறக்கவும். ஊறியபின் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“எதிலும் வல்லவர் வேலு”… புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பாராட்டு!

டிஜிட்டல் திண்ணை: துணை முதல்வர் பதவி… உதயநிதி போட்ட திடீர் நிபந்தனை! லீக் செய்த ரஜினி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share